நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டுரியான்  துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி

புத்ராஜெயா:

கடந்த ஆண்டு நடந்த டுரியான் துங்கால்  துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான விசாரணையின் நிலை குறித்து ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விசாரணை இன்னும் தெளிவாக இல்லை என்று இலக்கவியம் அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாக ஒரு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகத் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படாதது, அடுத்தகட்ட நடவடிக்கை எந்தத் திசையில் எடுக்கப்படும் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கம் கோருவது பொருத்தமானது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்த வழக்கு பொது நலன் சார்ந்த விஷயம்.

சம்பவம் நடந்து சுமார் ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன, இருப்பினும், இதுவரை, இதில் சம்பந்தப்பட்ட எந்தவொரு நபர் மீதும் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு, மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பதில்களும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த ஒரு சம்பவத்தில் 24 முதல் 29 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset