செய்திகள் மலேசியா
ரபிசி தொடர்புடையதாக நம்பப்படும் 500,000 ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டுகள்; விசாரணையின் நிலையை எம்ஏசிசி, போலிஸ் தெளிவுப்படுத்த வேண்டும்: ரோசியா
கோலாலம்பூர்:
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி தொடர்புடையதாக நம்பப்படும் 500,000 ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் நிலையை எம்ஏசிசியும் போலிஸ்படையும் தெளிவுபடுத்த வேண்டும்.
கெஅடிலான் பாண்டான் மகளிர் பிரிவுத் தலைவர் ரோசியா ரம்லி இதனை கூறினார்.
ஒரு இணையதளத்தால் வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனெனில் அவை, மக்கள் வருமான முன்முயற்சி திட்டத்தின் கீழ் 21.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு தானியங்கி விற்பனை இயந்திரத் திட்டம் தொடர்பாக, டேட்டாசோனிக் குரூப் பெர்ஹாட் (தற்போது நெக்ஸ்ஜி பெர்ஹாட்) நிறுவனம், ஜிஎப்ஐஎஸ் என்ற நிறுவனம் மூலம் ரபிசியுடன் தொடர்புடைய ஒரு இடைத்தரகருக்கு 500,000 ரிங்கிட் கையூட்டு வழங்கியதாகக் குற்றம் சாட்டுகின்றன என்று அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த போலிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையின் நிலை என்ன என்பதுதான் இன்னும் பதிலளிக்கப்படாத கேள்வி?
மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பரில் உள்துறை அமைச்சரைச் சந்தித்ததை ரபிசியே ஒப்புக்கொண்டார்.
அப்போது, இந்த ஊழல் வெளிப்பட்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்று அவரிடம் கூறப்பட்டது.
மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பது உண்மையானால், அரசாங்கத்திற்குள்ளிருந்தே ஏன் ஒரு 'எச்சரிக்கை' விடுக்கப்படுகிறது? என்று அவர் தனது முகநூல் வழியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 1:53 pm
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி
April 22, 2026, 1:52 pm
போலிசார் ஒருவரின் தலையில் மிதித்த சம்பவம் அப்பட்டமான வன்முறை: வழக்கறிஞர் ராஜேஷ்
April 22, 2026, 11:46 am
கண்ணீரில் நனைந்த மனிதாபிமானம்: டிக்டாக் பரிசாகக் கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு வழங்க நினைத்த இளைஞர்
April 22, 2026, 10:43 am
