செய்திகள் மலேசியா
புதிய தலைமுறையினர் சிகரெட் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அமைச்சரவைக்கு சட்டத்துறை தலைவர் வழங்கிய தவறான ஆலோசனையே காரணம்: கைரி
கோலாலம்பூர்:
புதிய தலைமுறையினர் சிகரெட் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அமைச்சரவைக்கு சட்டத்துறை தலைவர் வழங்கிய தவறான ஆலோசனையே காரணம்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தலைமுறையினர் சிகரெட் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டத்தை மலேசியாவால் உண்மையில் இயற்ற முடியும்.
ஆனால் சட்டத்துறை தலைவரின் தவறான ஆலோசனையால் முந்தைய முடிவு பாதிக்கப்பட்டது.
15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022இல் சுகாதார அமைச்சிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, இந்த நோக்கத்திற்காக ஒரு சட்ட விதியைத் தான் தயாரித்திருந்ததாக கைரி கூறினார்.
இருப்பினும், புகையிலை / வேப் தொழில் துறை அமைச்சரவையை வெற்றிகரமாக செல்வாக்கு செலுத்தி அதை நிராகரிக்க வைத்ததாகக் கூறப்படுவதால், அந்த விதிமுறை கைவிடப்பட்டது.
மேலும் என் பார்வையில், அப்போதைய சட்டத்துறை தலைவர் அமைச்சரவைக்கு தவறான ஆலோசனையை வழங்கினார் என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறினார்.
நேற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 17 வயது, அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதைத் தடைசெய்யும் ஒரு மசோதாவை நிறைவேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 3:02 pm
ஜாலான் செமினியில் அடுத்தடுத்து விபத்துகள்
April 22, 2026, 1:53 pm
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி
April 22, 2026, 1:52 pm
