செய்திகள் மலேசியா
மருத்துவமனையில் நூதன மோசடி: நோயாளிகளிடம் பணம் பறித்த பெண் கைது
ஜொகூர் பாரு:
நோயாளிகளிடம் பணம் கேட்டதாகக் கூறப்படும் நிலையில் சுல்தானா அமினா மருத்துவமனையில் 27 வயதுடைய ஒரு பெண்ணைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21 இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு தெற்கு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் ராவுப் சேலமத் தெரிவித்தார்.
"மருத்துவமனையில் மருத்துவ உதவி நாடிய 38 வயதுடைய ஒரு வெளிநாட்டுத் தொழிலாளியிடம், அவர் 700 ரிங்கிட் கேட்டதாகக் கூறப்படுகிறது.
"அந்தப் பெண்ணுக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை, மேலும் அவர் சனிக்கிழமை, ஏப்ரல் 25 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று அவர் புதன்கிழமை, ஏப்ரல் 22 ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் விசாரிப்பதாகவும், போலிஸில் புகார் அளிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு 30 ரிங்கிட் முன்பணமாக ஒரு பெண் கேட்டதாக சமூக ஊடகங்களில் சிறப்பிக்கப்பட்ட சம்பவத்துடன் இந்த வழக்கு தொடர்புடையதா என்பதையும் போலிஸார் பரிசோதித்து வருவதாக உதவி ஆணையாளர் ராவுப் கூறினார்.
அந்தப் பெண் மருத்துவமனையின் ஊழியர் அல்ல என்று sசம்பந்தப்பட்ட மருத்துவமனை பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 3:15 pm
பினாங்கு அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரிய மாட்டார்கள்: முதலமைச்சர்
April 22, 2026, 3:02 pm
