நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீக்கிரையான குடியிருப்புகள்: நிவாரண உதவிகளைத் துரிதப்படுத்த பிரதமர் அன்வார் நேரில் ஆய்வு

கோத்தா கினபாலு: 

சபா, சண்டாக்கான், கம்போங் பஹாகியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து நாசமான நிலையில், அப் பகுதியை நேரில் ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சபா மாநிலத்திற்கு வருகை தருகிறார். 

மாலை 4.20 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள நிலவரங்களை நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வீடுகளை இழந்த மக்கள் தங்கியுள்ள மூன்று தற்காலிகப் நிவாரண மையங்களுக்குப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார். 

மாலை 4.35 மணிக்கு கேஸ் தேசியப் பள்ளி நிவாரண மையத்திற்கும், தொடர்ந்து தாமான் பத்து சாப்பி மக்கள் வீட்டுவசதித் திட்ட (PPR) மண்டபத்திற்கும் அவர் செல்லவிருக்கிறார். 

மாலை 5.30 மணியளவில் லிண்டாஸ் சிபுகா மண்டபத்தில் உள்ள மக்களைச் சந்திப்பதோடு பிரதமரின் இந்த ஆய்வுப் பயணம் நிறைவடையும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் முறையாகச் சென்றடைவதையும், சீரமைப்புப் பணிகளின் வேகத்தையும் உறுதி செய்வதே பிரதமரின் இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு ஹெக்டேர் பரப்பளவில் நிகழ்ந்த இந்த கோரத் தீ விபத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset