செய்திகள் மலேசியா
RM230 மில்லியன் ரிங்கிட் மோசடி: அரசு சாரா நிறுவனத்தின் துணைத் தலைவர் உட்பட இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்
ஷா ஆலம்:
சுமார் RM230 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஜகாத் (Zakat) நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய புகாரில், அரசு சாரா நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை ஷா ஆலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட இவ்விருவருக்கும் எதிராக, விசாரணைக்காகத் தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 50, 60 வயது மதிக்கத்தக்க இந்தச் சந்தேகநபர்கள், கடந்த 2018 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அந்தத் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர், பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய ஜகாத் நிதியைத் தனது சொந்த நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றி, அதனைத் தனிப்பட்ட முதலீடுகளுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் வழங்கப்பட வேண்டிய பொது நிதியைத் தவறாகக் கையாடல் செய்துள்ளதால், இவ்வழக்கு தீவிரமாகப் பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகச் சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் முஹம்மத் அஸ்வான் ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
