செய்திகள் மலேசியா
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
கோத்தா பாரு:
தண்ணீரில் நனைந்த கால்குலேட்டரை சரிசெய்வதற்காக, கடை ஒன்று 30 ரிங்கிட்டை வசூலித்ததாக நம்பப்படும் வைரல் வழக்கு குறித்து, கிளாந்தான் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுத் துறை (கே.பி.டி.என்) விசாரணை நடத்தவுள்ளது.
சம்பந்தப்பட்ட கடை வியாபாரிக்கு ஒரு நோட்டீஸை வழங்கி விசாரணை நடத்துவதாகக் கிளாந்தான் கே.பி.டி.என். துணை இயக்குநர் அஸ்வாடி ஜாஃபர் தெரிவித்தார்.
சரிசெய்யப்பட்ட பொருட்களின் விலைகள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட வியாபாரி சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
"கால்குலேட்டரை சரிசெய்வதற்கு 30 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது உண்மையா அல்லது இல்லையா என்பதை அறிய, அந்தக் கடை வியாபாரி விதிக்கப்பட்ட கட்டணம் குறித்த அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்," என்றார் அவர்.
"2011 ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு, பேரம் பேசுவதைத் தடுப்பதற்கான சட்டத்தின் (சட்டம் 723) கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், கால்குலேட்டரை சரிசெய்வதற்கு 30 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் தமக்கு கிடைக்கவில்லை என்றார்.
இது சமூக ஊடகங்களில் வைரலான பின்னரே, இந்த வழக்கு குறித்து தமக்குத் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், ஒரு மாணவருக்கு, தண்ணீர் பட்டு கெட்டுவிட்ட கால்குலேட்டரைச் சரிசெய்வதற்காக, கோத்தா பாருவைச் சேர்ந்த ஒரு வியாபாரி 30 ரிங்கிட் கட்டணத்தை வசூலித்ததாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அந்த நடவடிக்கை, நியாயமற்றது என்று கூறப்பட்ட கட்டணத்தைக் கேள்விக்குட்படுத்தி, பொதுமக்களின் விமர்சனத்தை ஈர்த்தது.
கடை உரிமையாளர் பின்னர் விளக்குகையில், அந்தக் கட்டணம், வெறுமனே பேட்டரியை மாற்றுவதற்கானது அல்ல, மாறாக தண்ணீர் பட்டதால் ஏற்பட்ட சேதத்திற்கான சேவைச் செலவை உள்ளடக்கியதாகும் என்று கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
