செய்திகள் மலேசியா
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
கோலாலம்பூர்:
மதுபோதையில் வாகனம் ஓட்டும் அலட்சியம் நாளுக்கு நாள் அதிகரித்து, பல சாலை பயனர்களின் உயிரையே ஆபத்தில் தள்ளும் கவலைக்கிடமான நிலை தற்போது உருவாகியுள்ளது.
நேற்று ஜாலான் கெந்திங் கிள்ளானின் சிக்னல் சந்திப்பில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், சிவப்பு விளக்கை மீறி விபத்துக்குக் காரணமானதற்காகவும், ஒரு பெண்ணுக்கு இன்று கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையுடன் 13,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பெண்ணின் வாகன ஓட்டுநர் உரிமமும் பறிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறினால், 42 வயதான குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1) கீழ், குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர் உதவி ஆணையாளர் முஹம்மத் ஜாம்சூரி முஹம்மத் இசா கூறினார்.
இதற்கு முன்னர், நேற்றிரவு 8.22 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஓட்டிய BMW X1 காரும், ஒரு உள்ளூர் ஆணும் அவருடன் ஒரு பயணியும் ஓட்டிய யமஹா LC135 மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், சிவப்பு விளக்கில் நிறுத்தத் தவறியதாக நம்பப்படும் உள்ளூர் பெண், பச்சை விளக்கில் நேராகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
"இதனால், 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வலது முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. அதே சமயம், அவருடன் பயணித்த 15 வயது இளம்பெண்ணும் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடையவில்லை" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதன்படி, தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள், 03-2071 9999 என்ற எண்ணில் துன் எச்.எஸ். லீ போக்குவரத்து போலிஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறும், அல்லது விசாரணைக்கு உதவுவதற்காக அருகிலுள்ள போலிஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
