செய்திகள் மலேசியா
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
பூச்சோங்:
கெஅடிலான் பூச்சோங் தொகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து, உடனடியாக மறுகூட்டம் நடத்தப்பட வேண்டும் என அடிமட்டத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் நடந்த கூச்சல் குழப்பங்கள் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் வரும் ஜூன் மாதம் மலாக்காவில் நடைபெறவிருந்த கெஅடிலான் தேசிய மாநாட்டிற்கான தொகுதி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஒரு தகராறிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பூச்சோங் தொகுதியில் உச்சமன்ற உறுப்பினர் பரிதி வானன் ராமசாமி,
கூட்டத்தின் முடிவை ரத்து செய்யுமாறு கெஅடிலான் பொதுச் செயலாளர் பூசியா சாலேவிடம் ஒரு அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் கூட்டத்தில் பெரிய குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கெஅடிலான் பூச்சோங் தொகுதி தலைவர் ஜைஹாஸ்ரி ஜாபர் மறுத்தார்.
இந்தச் சம்பவத்தை, கட்சியின் ஜனநாயகச் செயல்பாட்டில் வழக்கமாக நிகழும் ஒரு சிறு இடையூறு ஆகும்.
மேலும், கூட்டம் ஒட்டுமொத்தமாக சுமூகமாக நடந்ததாக அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
