செய்திகள் மலேசியா
அவதூறு வழக்கு சுமூகமாகத் தீர்க்கப்பட்டது: பாலஸ்தீன மக்கள் உதவி நிதிக்கு 15,000 ரிங்கிட்டை ஃபட்லினா நன்கொடையாக அளித்தார்
கோலாலம்பூர்:
கல்வியமைச்சர் பட்லினா சிடேக் மீதான அவதூறு வழக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனைத்துத் தரப்பினரும் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டதை அடுத்து முடிவுக்கு வந்தது.
பள்ளிகளில் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை முன்னிட்டு தக்பீர், குனூத் நாஸிலா ஓதுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதில் ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கிப்ளி இஸ்மாயில், மற்ற இரண்டு பிரதிவாதிகளுடன் சேர்ந்து மன்னிப்புக் கோரினர்.
மேலும் முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் வாதிக்கு எதிராகப் பல்வேறு விளக்கங்களையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்வு எட்டப்பட்டது.
அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட தீர்வு நிபந்தனைகளின் அடிப்படையில், 15,000 ரிங்கிட் செலவுத் தொகையைச் செலுத்துவது உட்பட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹில்மியா யூசோப் தீர்ப்பைப் பதிவு செய்தார்.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு பிரதிவாதிகளான ஹரக்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மஸ்லான் யூசோ, அப்பத்திரிகையின் வெளியீட்டாளரான கேலரி மீடியா செர்பானிகா நிறுவனமும் ஆகும்.
இந்த வழக்கு விசாரணையின்போது பட்தலினாவும் சூல்கிப்ளியும் ஆஜராகியிருந்தனர்.
முன்னதாக 15,000 ரிங்கிட் செலவுத் தொகையை ஜாசின் நாடாளுமன்றத்தின் பாலஸ்தீன மக்கள் உதவி நிதிக்கு ஃபட்லினா நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
