செய்திகள் மலேசியா
அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்
அம்பாங்:
இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து அம்பாங்கில் 16 நிமிட இடைவெளியில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
ஆனால் இதில் எந்தக் கட்டிடங்களுக்கும் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில்,
முதல் சம்பவம் பிற்பகல் 3.35 மணிக்கு, காம்பங் அம்பாங் இந்தாவில் உள்ள ஜாலான் இந்தா 4 என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
வீட்டின் பின்புறம் 20-20 அடி அளவிலான மலையடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் எந்தக் கட்டிடங்களும் சேதமடையவில்லை அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
அதே சாலையில் உள்ள லாட் 1777 என்ற இடத்தில், 15க்கு 20 அடி உயரமுள்ள செங்குத்தான பாறையின் மீது மோதி வேன் சேதமடைந்தது.
சுமார் 16 நிமிடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 9:47 pm
கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
April 19, 2026, 9:45 pm
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்
April 19, 2026, 5:49 pm
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 19, 2026, 5:33 pm
மங்கா ஹாரும் மானிஸ் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம்: 25,000 ரிங்கிட்டை இழந்த வியாபாரி
April 19, 2026, 5:26 pm
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்
April 19, 2026, 5:03 pm
சண்டாக்கான் மிதக்கும் வீடுகளில் கோரத்தீ: 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
April 19, 2026, 4:50 pm
