செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்
கோத்தா திங்கி:
இன்று மதியம் இங்குள்ள தாமான் கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.
அந்தச் சம்பவத்தில், இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஒரு ஆண் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மூலங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளால் பகிரப்பட்ட இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் யூசோஃப் ஒத்மான், தொடர்பு கொள்ளப்பட்டபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்தில் போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நாங்கள் இன்னும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று அவர் சுருக்கமாகத் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 9:47 pm
கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
April 19, 2026, 9:46 pm
அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்
April 19, 2026, 9:45 pm
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்
April 19, 2026, 5:49 pm
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 19, 2026, 5:33 pm
மங்கா ஹாரும் மானிஸ் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம்: 25,000 ரிங்கிட்டை இழந்த வியாபாரி
April 19, 2026, 5:03 pm
சண்டாக்கான் மிதக்கும் வீடுகளில் கோரத்தீ: 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
April 19, 2026, 4:50 pm
