நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பிங் துரோங் டிஆர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி, விளையாட்டிலும் அதிகமான சாதனையாளர்கள் உருவாக வேண்டும்: டத்தோ சிவக்குமார்

தைப்பிங்:

தைப்பிங் துரோங் டிஆர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி, விளையாட்டிலும் அதிகமான சாதனையாளர்கள் உருவாக வேண்டும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

டிஆர்பி தமிழ்ப்பள்ளியின் 73ஆவது ஆண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் மிகுந்த உற்சாகம், ஒற்றுமை என ஊக்கமளிக்கும் பங்கேற்புடன் நடைபெற்றன.

மேலும் மாணவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டு மனப்பான்மை, குழுப்பணி, உயர் உறுதிப்பாட்டைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இதுபோன்ற விளையாட்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கின்றன.
இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், இதில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் பெருமைக்குரிய சாதனைகளுக்கும் வாழ்த்துகள்.

இப்பள்ளி கல்வி, புறப்பாட நடவடிக்கைகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்கி, எதிர்காலத்தில் தரமான தலைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset