செய்திகள் மலேசியா
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; அவர்களை எப்போதும் மறக்கக் கூடாது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா இடைநிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தலைமையேற்று கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது' - குறள் 103
என்ன பயன் கிடைக்கும் என்று எதிர்பாராமல் உதவி செய்பவர்கள்தான் ஆசிரியர்கள்.
அப்படி நம்மை ஏற்றிவிட்ட ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருந்து, அவர்களுக்காக நன்றி நவிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 9:47 pm
கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
April 19, 2026, 9:46 pm
அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்
April 19, 2026, 9:45 pm
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்
April 19, 2026, 5:33 pm
மங்கா ஹாரும் மானிஸ் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம்: 25,000 ரிங்கிட்டை இழந்த வியாபாரி
April 19, 2026, 5:26 pm
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்
April 19, 2026, 5:03 pm
சண்டாக்கான் மிதக்கும் வீடுகளில் கோரத்தீ: 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
April 19, 2026, 4:50 pm
