நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்

செந்தோசா:

பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  குணராஜ் இதனை கூறினார்.

செந்தோசா சட்டமன்ற தொகுதியின் நோன்பு பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்பு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 7ஆவது ஆண்டாக இந்த உச்சரிப்பு நடைபெற்றது.

மலாய்க்காரர்களை தவிர்த்து இந்தியர்கள், சீனர்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக இதுபோன்ற விழாக்கள் தான் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

அதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவிக்கின்றனர்.

இத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும்.

மேலும் அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என்றால் பாதிப்பு நமக்கு தான்.

ஆக இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset