செய்திகள் மலேசியா
கடற்கரையில் விளையாடிய சிறுமி மாயம்: முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
லஹாட் டத்து:
இன்று காலை டேசா கென்ச்சானா, ஜாலான் ஃபெல்டா சஹாபத் 16 அருகிலுள்ள கடற்கரையில் ஐந்து வயது சிறுமி ஒருவரை முதலை ஒன்று பிடித்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தற்காலிகத் தலைவர் முஹம்மத் ஹம்கா முஸ்தமின், MERS999 எண் வழியாக, காலை 10.27 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.
ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில், காலை 10 மணியளவில், அந்தச் சிறுமி கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென முதலை அவரைப் பிடித்ததாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் முதலையால் கடித்து, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவரின் முழு அடையாளமும் இன்னும் பெறப்படவில்லை.
"லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு அதிகாரிகள், தேடுதல், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
காணாமல் போன பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்காக, போலிஸாரின் உதவியுடன் தேடுதல், மீட்பு நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தேடுதல் பணியில் தீயணைப்புப் படை, நிலையத்திலிருந்து சுமார் 101 கிலோமீட்டரில், சம்பவ இடம் மிகவும் தொலைவில் இருப்பது, அபாயகரமான சுற்றுச்சூழல் நிலைமைகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 9:47 pm
கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
April 19, 2026, 9:46 pm
அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்
April 19, 2026, 9:45 pm
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்
April 19, 2026, 5:49 pm
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 19, 2026, 5:33 pm
மங்கா ஹாரும் மானிஸ் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம்: 25,000 ரிங்கிட்டை இழந்த வியாபாரி
April 19, 2026, 5:26 pm
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்
April 19, 2026, 5:03 pm
