நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நூருல் இஸாவை கெஅடிலான் தொகுதி பரிந்துரைத்துள்ளது

கோலாலம்பூர்:

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நூருல் இஸாவை கெஅடிலான் பத்து தொகுதி பரிந்துரைத்துள்ளது.

16ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கிளைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், 

கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வரை வேட்பாளராக கெஅடிலான் பத்து தொகுதி ஒருமனதாகப் பரிந்துரைத்தது.

கெஅடிலான் பத்து தொகுதி தலைவர் அஷீக் அலி கூறுகையில், இந்தப் பரிந்துரை தொகுதி உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது.

மேலும் நேற்று நடைபெற்ற பத்து தொகுதியில் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.

2008 முதல் 2022 வரை, இந்த இடத்திற்கு வழக்கமாக கிளைத் தலைவர் பதவியில் இருந்தவர்களே போட்டியிட்டனர்.

எனவே, 16ஆவது பொதுத் தேர்தலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, கெஅடிலான் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த தொகுதி தலைவர்களுக்கு முன்னுரிமை அளித்தது.

இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்று தொகுதி உறுப்பினர்கள் முன்மொழிகின்றனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset