நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்

தவாவ்: 

மெரோத்தாய் பகுதியில் பள்ளி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக 15, 16 வயதுடைய மூன்று மாணவர்களைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே பொம்பாலாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

மூன்றாம் படிவம் பயிலும் அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பள்ளியின் ஆலோசனை ஆசிரியரிடம் முதலில் தெரிவித்துள்ளார். 

பின்னர் இது குறித்துத் தாயாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவியைக் காரில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவரின் நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பள்ளியில் சந்தேக நபர்களின் நண்பர்கள் தன்னைக் கேலி செய்ததாகவும், தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாகவும் அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தவாவ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஜாஸ்மின் ஹுசின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் இன்று தவாவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலதிக விசாரணைக்காக வரும் புதன்கிழமை வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset