செய்திகள் மலேசியா
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல: ஃபஹ்மி
புத்ராஜெயா:
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட மொத்தம் 20 கோடி லிட்டர் டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல.
தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர், 20 கோடி லிட்டர் டீசல் ஏற்றுமதியில் புரூணை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் கீழ் உள்ள தகவல் தொடர்பு கட்டளை மையம் மற்றும் பல தொடர்புடைய தரப்பினர் இணைந்து நடத்திய ஆய்வில், அந்த டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்ட டீசல் ஏற்றுமதியின்போது இருந்ததைப் போன்றதே ஆகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது
April 23, 2026, 12:20 pm
பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்
April 23, 2026, 11:45 am
