செய்திகள் மலேசியா
1 எம்டிபி ஊழல் தொடர்பான பங்குதாரர் வழக்குகளுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் தீர்வை எட்டியுள்ளது
நியூயார்க்:
ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ள 1 எம்டிபி நிர்வாகத்தில் தனது பங்கு தொடர்பாக பங்குதாரர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டி வால் ஸ்ட்ரீட் வங்கி ஒன்று தொடர்ந்த வழக்கை சமரசம் செய்துகொள்ள கோல்ட்மேன் சாக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸும் அதன் பங்குதாரர்களும் இந்த வழக்கை சமரசம் செய்துகொள்ள ஒரு உடன்பாட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
மேலும், மே 20ஆம் தேதிக்குள் பூர்வாங்க ஒப்புதலுக்காக இந்த சமரச ஒப்பந்தத்தைச் சமர்ப்பிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று மன்ஹாட்டன் கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கடிதத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.
வழக்கின் சமரச ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை. மேலும் கோல்ட்மேன் சாக்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மேலும் ஸ்வீடன் ஓய்வூதிய நிதியமான ஸ்ஜுண்டே ஏபி-ஃபோண்டன் தலைமையிலான பங்குதாரர்களின் வழக்கறிஞர்களும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது
April 23, 2026, 12:20 pm
பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்
April 23, 2026, 11:46 am
