செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசு நிர்வாகம் வழக்கம் போல் தொடர வேண்டும்: துவாங்கு முக்ரிஸ்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் அரசு நிர்வாகம் வழக்கம் போல் தொடர வேண்டும் என்று ஆளுநர் துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிர் கூறினார்.
15ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இதன் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவை ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தொடங்கி வைத்தார்.
ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசாங்க நிர்வாகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க விழாவிலும் வழக்கமாகத் தன்னுடன் வரும் மாநிலப் பிரமுகர்கள் வராத போதிலும், இந்த நிலைமை கூட்டத்தொடரின் சட்டப்பூர்வத்தன்மையையோ அல்லது சுமுகமான செயல்பாட்டையோ பாதிக்கவில்லை.
மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண், மாநில அரசாங்கத்தின் செயற்குழுவினரின் தலைமையின் மூலம், எனது மாநிலமும் மக்களும் தொடர்ந்து செழிப்பாகவும் நல்லிணக்கமான சூழலிலும் வாழ வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது
April 23, 2026, 12:20 pm
பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்
April 23, 2026, 11:46 am
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல: ஃபஹ்மி
April 23, 2026, 11:45 am
