நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்

சைபர்ஜெயா:

சுற்றுலாத் துறையையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக, லங்காவியின் வரிவிலக்கு பகுதி என்ற சலுகையை மீட்டெடுக்கக் கோரி கெடா சுல்தான் சலாஹூதீன் சுல்தான் பத்லிஷா கூறிய கருத்தை அரசாங்கம் ஆய்வு செய்யும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

லங்காவியில் செலவுகள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதால், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரையும் அந்த சுற்றுலாத்தலம் ஈர்க்காது.

எனவே இந்த முழு விஷயத்தையும் ஆராய்ந்து, மீண்டும் உதவி வழங்க முடியுமா என்று இரண்டாவது  நிதியமைச்சர் டத்தோஶ்ரீ அமீர் ஹம்சா அஜிஸான் அவர்களிடம் நான் விசாரித்து வருகிறேன்.

முந்தைய சலுகைக் குறைப்பு லங்காவியின் கவர்ச்சியைப் பாதித்துள்ளது.

அசல் சலுகைகளை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் சுல்தான் சலாஹூடின் கூறியுள்ளார்.

லங்காவி ஒரு வரிவிலக்கு தீவு என்ற அந்தஸ்து இன்னும் நீடிக்கிறது.

ஆனால் முன்பு அனுபவித்து வந்த பல சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று  பிரதமர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset