செய்திகள் மலேசியா
உரிமையாளரின் அனுமதியின்றி தனித்துவமான வாகனப் பதிவு எண் மாற்றப்பட்டதை ஜேபிஜே தீவிரமாகக் கருதுகிறது: ஃபாட்லி
கோலாலம்பூர்:
அசல் உரிமையாளரின் அனுமதியின்றி தனித்துவமான வாகனப் பதிவு எண்கள் மாற்றப்பட்டதை ஜேபிஜே தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறது.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
அசல் உரிமையாளரின் அனுமதியின்றி வாகனப் பதிவு எண்கள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பல புகார்களை எங்கள் தரப்பு பெற்றுள்ளது.
அவ்வப்போது விசாரணைகளை நடத்தி, தற்போதைய நடைமுறைகள், சட்டங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று இன்று நடைபெற்ற சிறப்புப் பதிவு எண் தொடக்கம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கார் வாடகை முகவருக்கு வாடகைக்கு விடப்பட்ட தனது நிறுவனத்தின் டொயோட்டா அல்ஃபார்ட் காரின் பதிவு எண், அனுமதியின்றி மாற்றப்பட்டதாக ஒரு கார் வாடகை சேவை தொழிலதிபர் கூறியதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பிரபலமான மற்றும் தனித்துவமான பி111 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த வாகனம், அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் சிலாங்கூர், புச்சோங்கில் உள்ள ஒரு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சனைகளைச் சந்தித்திருப்பதால், இது முதல் சம்பவம் அல்ல என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:24 pm
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைக்கும் சாத்தியத்தை பிரதமர் நிராகரிக்கவில்லை
April 17, 2026, 4:22 pm
மலேசிய எண்ணெய் கப்பல் சேதமடைந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்பட முடியவில்லை: பிரதமர்
April 17, 2026, 3:50 pm
