செய்திகள் மலேசியா
குப்பை கொடுத்த மறுவாழ்வு: சேமிப்புப் பணத்தைத் தொடாமல் கண் அறுவைச் சிகிச்சை செய்த முதியவர்
நீலாய்:
தனது குடியிருப்புப் பகுதியில் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வதில் காட்டிய விடாமுயற்சியால் ஒரு முதியவர் தனது இடது கண்ணுக்கான அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டியுள்ளார்.
SWM என்விரான்மென்ட் நிறுவனத்தின் கீழ் உள்ள 'கிடா ரீசைக்கிள்' (KitaRecycle) திட்டத்தின் மூலம், 74 வயதான ஜாஃபர் இத்ருஸ், இன்றுவரை தனது வெகுமதிப் புள்ளிகளில் இருந்து 8,000 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார்.
மார்டியின் ஓய்வூதியதாரரான அவர், இளமையில் இருந்தே வேலை செய்யப் பழகியதால், வீட்டில் உட்கார்ந்து ஓய்வெடுக்க முடியாது என்றும், 2021 ஆம் ஆண்டு முதல் தனது ஓய்வு நேரத்தைத் தனது புதிய பொழுதுபோக்கில் செலவிட விரும்புவுதாகவும் கூறினார்.
இருப்பினும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது இடது கண்ணின் கண்புரை அறிகுறிகளை அனுபவித்ததாகவும், பரிசோதனைக்கு முன் அது மங்கலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"உடனடியாகக் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் மருத்துவர் எனக்குப் பரிந்துரைத்தார். கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, மலேசிய புத்ரா பல்கலைக்கழக மருத்துவமனையில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
"லென்ஸை மாற்ற 1,300 ரிங்கிட் செலவாகியிருந்தது. இந்த மறுசுழற்சி வெகுமதிப் புள்ளிகளை மீட்டதில் இருந்து கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி அதை நான் செலுத்த வேண்டியிருந்தது" என்று சமீபத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான ரிங்கிட் செலவாகும் அறுவை சிகிச்சைக்குத் தனது சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவில்லை என்றும், இருப்பினும், மறுசுழற்சி திட்டத்தில் பங்கேற்றத்தன் விளைவாகத் தான் பயன்பெறக்கூடிய ஒன்று இருந்ததில் தான் மகிழ்ச்சியடைந்ததாக ஜாபார் தெரிவித்தார்.
மறுசுழற்சி நடவடிக்கையில் தனக்கிருந்த ஆர்வத்தைப் பற்றிக் கூறிய ஜாபார், 2021 ஆம் ஆண்டு, தனது குடியிருப்புப் பகுதியான நீலாயில் உள்ள தாமான் முலியா லெஜெண்டாவில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், அதில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறினார்.
"என் சொந்த வீட்டில் கழிவுப் பொருட்களைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், மறுசுழற்சி செய்வதற்காக, தங்கள் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு என்னை அழைக்கும் குடியிருப்பாளர்களும் உள்ளனர்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:24 pm
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைக்கும் சாத்தியத்தை பிரதமர் நிராகரிக்கவில்லை
April 17, 2026, 4:22 pm
