நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்

கிள்ளான்:

கிள்ளான் பகுதியில் இளம் பெண்ணிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட 38 வயது மதிக்கத்தக்க வேலையற்ற நபருக்கு, இரண்டு மாத கால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு 11 மணியளவில், கிள்ளான் தெலுக் புலாய் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முஹம்மத் ராக்கிஸ் என்ற அந்த நபர், அங்குள்ள 21 வயது மதிக்கத்தக்க பெண்ணை நோக்கி தனது ஆண் உறுப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உதவி கோரி கூச்சலிட்டதை அடுத்து அவரது உறவினர்கள் விரைந்து வந்து உதவிக்கு வந்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ஏ. கார்த்தியாயினி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தவற்றை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

இந்தத் தண்டனைக்காலம் அவர் கைது செய்யப்பட்ட ஏப்ரல் 14-ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் ஏற்கனவே சிறையிலிருந்து விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509-இன் கீழ் இவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் விதிக்க வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset