செய்திகள் மலேசியா
ஏப்ரல் 19, 20ஆம் தேதிகளில் அக்ஷயதிருதி நாள்; தங்கத்தை வாங்கி சேமியுங்கள்: மிக்ஜா தலைவர் டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
இவ்வாண்டுக்கான அக்ஷயதிருதி வரும் ஏப்ரல் 19, 20 என இரு தினங்களுக்கு அனுசரிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் மக்கள் தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என்று மிக்ஜா எனப்படும் மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.
ஏப்ரல் 19ஆம் தேதி பிற்பகல் 1.47 மணி முதல் மறுநாள் ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 1.47 மணி வரை அக்ஷயதிருதி நடப்பில் இருக்கும்.
இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி சேர்ப்பது பாரம்பரியமாக உள்ளது. இந்த நல்ல நேரத்தில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு உயரம் தரும் என்பது ஐதீகமாகும்.
இந்த அக்ஷயதிருதியை முன்னிட்டு மலேசிய இந்திய நகை வணிகர்கள் பொற்கொல்லர்கள் உறுப்பினராக இருக்கும் நகை கடைகள் சிறப்பு சலுகைகளையும் வழங்க உள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் நகைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது ஏற்புடைய நடவடிக்கையா என்று பலருக்கு கேள்விகள் எழும்.
ஒரு காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதன் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. அது உண்மைதான். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
வரும் காலங்களில் அந்த தங்கத்தின் விலை மேலும் உயருமே தவிர அது ஒருபோதும் குறையாது. விலைகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். ஆனால் தங்க முதலீடு என்றும் வீண் போனதில்லை. இந்தியர்கள் அதனால்தான் அதில் துணிந்து வாங்கி சேமிக்கிறார்கள்
ஆகவே மக்கள் தங்கத்தை வாங்கி சேமிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது என்று டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:32 pm
தெலுக் இந்தானில் பயங்கரம்: அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முதியவரை வெட்டிக்கொலை
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:24 pm
