நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்:

மலேசிய எண்ணெய் கப்பலான ஓஷன் தண்டர், சிங்கப்பூரின் கடல் பகுதியில் நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், இன்று மாலை 5.30 மணிக்கு பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

274 மீட்டர் நீளமுள்ள அந்தக் கப்பல், ஈராக்கிலிருந்து சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் பாஸ்ரா ஹெவி கச்சா எண்ணெயைக் கொண்டு வருகிறது. இது, பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) இயக்கும் பின்நிலைத் தொழில் மையமான பெங்கேராங் ஒருங்கிணைந்த பெட்ரோலிய வளாகத்திற்கு (பி.ஐ.பி.சி.) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியக் கடல் நீருக்குள் நுழைவதற்கு முந்தைய கடைசிப் பாதையுமான, அந்த நீரிணையில் நிலையான போக்குவரத்து, அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு, எதிர்வரும் காலத்தில் நங்கூரமிடும், இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைக் குறிக்கிறது.

அந்தக் கப்பல், ஏப்ரல் 5 ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவும் சென்றது. 

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தொடர்பான பதற்றங்களைத் தொடர்ந்து தற்போது அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய மூலோபாயப் பாதை இதுவாகும்.

ஓஷன் தண்டர், இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அந்தப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகும்.

தொடர்ந்து, ஈராக்கிலிருந்து கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சிறப்பு அனுமதியை வழங்குவதாகத் தெரிகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset