செய்திகள் மலேசியா
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைக்கும் சாத்தியத்தை பிரதமர் நிராகரிக்கவில்லை
சைபர்ஜெயா:
நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால் அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் சாத்தியத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரிக்கவில்லை.
இந்தப் பரிசீலனை தற்போதைய தேவைகளையும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் அளவையும் பொறுத்தது.
அமைச்சர்களின் சம்பளம் உண்மையில் ஒப்பீட்டளவில் குறைவாகத் தான் இருக்கிறது.
ஆனால் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் சம்பளம் வாங்குவதில்லை.
ஆனால் அவர்கள் நன்றாகப் பணியாற்றும் வரை சம்பளம் என்பது அவர்களின் உரிமை.
நான் அதைப் பரிசீலிப்பேன் என்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சிகளில், மலேசியா இந்தோனேசியாவைப் போன்றே அதே நிலைப்பாட்டை எடுக்குமா என்பது குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
முன்னதாக, நிதி இறுக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:22 pm
மலேசிய எண்ணெய் கப்பல் சேதமடைந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்பட முடியவில்லை: பிரதமர்
April 17, 2026, 3:50 pm
