செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மந்திரி புசார் அறிவித்த 131 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம்; மக்களின் வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைப்பதோடு பொருளாதாரத்தை மேம்படுத்தும்: குணராஜ்
செந்தோசா:
சிலாங்கூர் மந்திரி புசார் அறிவித்த 131 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம் மக்களின் வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைப்பதோடு பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
சிலாங்கூர் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தும் திட்டத்தை அறிவித்த சிலாங்கூர் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகம் முழுவதற்கும் எனது உயரிய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
குறிப்பாக மூலப்பொருட்கள் விநியோகச் சங்கிலியையும் மக்களின் வாழ்க்கைச் செலவையும் பாதித்துள்ள உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, எரிசக்தி விநியோக நெருக்கடி, மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு இது அவசியமாகும்.
மேலும் ஜெலாஜா எஹ்சான் ரஹ்மா, சிலாங்கூர் உணவு கிடங்கு, கீத்தா சிலாங்கூர் பற்றுச் சீட்டு, பொதுப் போக்குவரத்து மானியங்கள், மாணவர்களுக்கான இலவச காலை உணவு, விவசாயத் துறைக்கான ஆதரவு போன்ற பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்படவுள்ளது.
இது மக்களின் நலன், குறிப்பாக பி40 பிரிவினர், விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழில்முனைவோரின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.
அவ்வகையில் இந்தத் திட்டத்தின் செயல்பாட்டை நான் வரவேற்று முழுமையாக ஆதரிக்கிறேன்.
இது உள்ளூர் மக்களுக்கு நேர்மறையான தாக்கத்தையும் நேரடிப் பலன்களையும் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்த முயற்சி, வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அடிமட்ட அளவில் பொருளாதார நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும்.
ஜூன் 2026இல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் செயல்பாடு தொடர்பான தகவல்கள், செந்தோசா பகுதி மக்களுக்கு விரிவாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதில் எனது அர்ப்பணிப்பையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மாநில அரசால் வழங்கப்படும் பலன்களைப் பெறுவதில் தகுதியான எந்தவொரு குழுவும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அதே நேரத்தில், மக்களின் நல்வாழ்வு, சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்காக இந்த முன்னெடுப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில், சமூகத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டாகப் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:32 pm
தெலுக் இந்தானில் பயங்கரம்: அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முதியவரை வெட்டிக்கொலை
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:24 pm
