செய்திகள் மலேசியா
மலேசிய எண்ணெய் கப்பல் சேதமடைந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்பட முடியவில்லை: பிரதமர்
சைபர்ஜெயா:
எரிபொருளை ஏற்றிச் சென்ற ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்று சேதமடைந்ததால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட முடியவில்லை.
ஜலசந்தியைக் கடந்து சென்ற இரண்டு கப்பல்களில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது.
மற்றொன்று தேசிய கடல் எல்லையை நெருங்கிக் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை இன்னும் கடந்து செல்லாத மற்ற ஐந்து கப்பல்களின் நிலைமையை அரசாங்கம் தற்போது கண்காணித்து வருகிறது.
ஒரு கப்பல் வந்து சேர்ந்துவிட்டது, மற்றொன்று மலேசிய கடல் எல்லைக்குள் நுழைய உள்ளது.
அதாவது, இரண்டு கப்பல்கள் உள்ளன. மற்றொன்று கடந்து சென்றிருந்தாலும் அது குறித்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் இன்னும் கண்காணித்து அதை வருகிறது.
அனுமதியைப் பொறுத்தவரை, ஈரான் எங்கள் ஏழு கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதி அளித்துள்ளது.
ஆனால் ஒரு கப்பலில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அது துறைமுகத்திலிருந்து புறப்பட முடியவில்லை.
இந்த சமீபத்திய சூழ்நிலை காரணமாக, சில சிக்கல்களை அரசு எதிர்கொள்கிறது.
இங்குள்ள சைபர்ஜயா தீயணைப்பு, மீட்பு நிலைய சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:07 pm
ஓஷன் தண்டர் கப்பல் இன்று பெங்கேராங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
April 17, 2026, 4:53 pm
விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
April 17, 2026, 4:51 pm
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த வேலையற்ற இளைஞர்: 2 மாத சிறைத்தண்டனை வழங்கிய கிள்ளான் நீதிமன்றம்
April 17, 2026, 4:27 pm
லங்காவியின் வரிவிலக்கு சலுகைகளை மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது: பிரதமர்
April 17, 2026, 4:24 pm
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைக்கும் சாத்தியத்தை பிரதமர் நிராகரிக்கவில்லை
April 17, 2026, 3:50 pm
