நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை; உள்நபர்களின் தொடர்பு இருக்கலாம்?: போலிஸ் விசாரணை

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் உள்நபர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் இதனை கூறினார்.

இங்குள்ள ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் கேவிடி தங்க மாளிகையில் நேற்று கொள்ளை சம்பவம் நடந்தது.

இச்சம்பவத்தில் நகைகளை கொள்ளையடித்த ஆயுதமேந்திய குற்றவாளிகள் ஒரு போலி வாகன பதிவு எண்ணைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் வேறொரு வாகனத்திற்குச் சொந்தமானதாகும்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக, அசல் பதிவு எண்ணைப் பயன்படுத்திய வாகன உரிமையாளரின் வாக்குமூலத்தையும்  போலிஸ் தரப்பு பதிவு செய்துள்ளது.

இதுவரை புகார்தாரர், கடை உரிமையாளர், 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 நபர்களின் வாக்குமூலங்கள் விசாரணைக்கு உதவுவதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைக்காக, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலிஸ் ஆய்வு செய்து வருகிறது.

குறிப்பாக உள்நபர்களின் தொடர்பு உட்பட எந்தவொரு சாத்தியக்கூறையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.

இருப்பினும் இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset