நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுயசார்பு எரிசக்தியை நோக்கி மலேசியா

புத்ராஜெயா: 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து மின்சார விலை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, எரிசக்தி தன்னிறைவை மேம்படுத்தும் வகையில், சோலார் ஆக்சிலரேட்டட் டிரான்சிஷன் ஆக்ஷன் புரோகிராம் (சோலார் ஆத்தாப்) திட்டத்திற்கு நுகர்வோர் சந்தா செலுத்துமாறு அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

இந்தத் திட்டம் கூரை மீது சூரிய மின் பலகைகளை நிறுவுவதை ஊக்குவிப்பதாக எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சு (பெட்ரா) கூறியது. நேரடி பணப்புழக்கத்திற்கு பதிலாக குறைந்த எரிசக்தி செலவுகள் மூலம் நுகர்வோருக்கு பொருளாதார மதிப்பை இது உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 "இந்தத் திட்டம் எரிசக்தி தன்னிறைவை மேம்படுத்தும் என்றும், அதன் மூலம் தற்போதைய மின்சார விலை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று பெட்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வணிக நுகர்வோருக்கு, சூரிய குத்தகை, வாடகை-க்கு-சொந்தமானவை போன்ற பல்வேறு கொள்முதல் மாதிரிகள் கிடைக்கின்றன. இந்த மாதிரிகள், முன்கூட்டிய மூலதனத்தின் தேவையின்றி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அணுக உதவுகின்றன.

தொடர்ந்து, சோலார் ஆத்தாப் திட்டத்தை பயனர்கள் சுலபமாக அணுக பெட்ரா தற்போது மேம்பாடுகளை வகுத்து வருகிறது. 

நடுத்தர மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம், அதி உயர் மின்னழுத்த வகைகளில் உள்ள பயனர்களுக்கு மற்றொரு வாய்ப்பையும் பெட்ரா வழங்கியுள்ளது. மின்சாரத்தின் நீண்டகால விநியோகத்திற்காக, அவர்கள் கார்ப்பரேட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத் திட்டத்தை (Corporate Renewable Energy Supply Scheme) பரிசீலிக்கலாம்.

நிறுவனங்கள், சிங்கிள் பையரைத் (Single Buyer) தொடர்புகொள்வதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மேலும், CRESS வழிகாட்டுதல்கள் எரிசக்தி ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் கிடைக்கின்றன.

இதையடுத்து, ஏர் கண்டிஷனிங் 24 டிகிரி செல்சியஸில் அமைப்பது, ஆற்றல் திறனுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட, ஆற்றல் திறனுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும் பெட்ரா பயனர்களை ஊக்குவிக்கிறது.

பயன்பாட்டு நேரத் திட்டத்தை (Time of Use scheme) பயன்படுத்திக் கொள்வது, மின்சார நுகர்வுச் செலவுகளை மேம்படுத்த உதவும். இந்த முன்முயற்சிகள் மக்களின் எரிசக்திச் செலவுகளின் சுமையைக் குறைக்கும் என்று பெட்ரா நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த முன்முயற்சிகள், நாட்டின் எரிசக்தி நிலப்பரப்பை வலுப்படுத்துவதில் ஒரு மூலோபாய ஊக்தியாகச் செயல்படுகின்றன. அவை, விநியோகத்தின் பாதுகாப்பு, மலிவு, நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset