நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்; காடுகளை பாதுகாப்பது அனைவரின் தலையாய கடமையாகும்: திலிப் மார்டின்

கேமரன்மலை -
காடுகளை பாதுகாப்பது அனைவரின் தலையாய கடமையாகும் என்று reach இயக்கத்தின் தலைவர் திலிப் மார்டின் கூறினார்.

காடுகளை பாதுகாப்பதற்கான அவசியம் குறித்து கேமரன்மலையில் செயல்பட்டு வரும்  REACH( reginal environmental awareness cameron highlands)  எனும் சுற்றுச் சூழல் இயக்கம் தொடர்ந்து  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கேமரன் மலையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வலுப்படுத்த ஆண்டு  தோறும் விழிபுணர்வுகளை ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 

குறிப்பாக கேமரன்மலையில் உள்ள  வனப் பகுதியில் மரக்கன்று நடும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

கேமரன்மலையில் காடுகளை பாதுகாக்கவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும் என்றார்.
இந்த திட்டத்தில் கேமரன்மலையில் உள்ள தமிழ்ப்பள்ளியை  சேர்ந்த  மாணவர்களும் பங்கேற்றனர்.

கேமரன்மலை முக்கிய நீர்நிலைப் பகுதி, சரிவு நிலைப்படுத்தி, பல்லுயிர் வாழ்விடங்கள், கார்பன் உறிஞ்சி மற்றும் மலைப்பகுதிகளின் இயற்கை குளிர்விப்பான் என செயல்படுகிறது.

கட்டுப்பாடற்ற வளர்ச்சி, மண் அரிப்பு, நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க, 18ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தமரக்கன்று நடும் திட்டம் உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset