நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார் 

ஜொகூர்பாரு:

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணமூர்த்தி இதனை கூறினார்.

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் உள்ள இந்திய சமூகத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடன் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.

குறிப்பாக இஸ்கண்டார் புத்ரி பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களின் பிரதிநிதிகளுடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவு உறவை வலுப்படுத்தும் ஒரு தளமாக இது அமைந்தது.

உள்ளூர் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் கோத்தா  இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பண்டாக் அகமது பகிர்ந்து கொள்வதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், நலத்திட்டங்கள், சமூக மேம்பாடு, பொருளாதார உதவி, தொழில்முனைவோர் வாய்ப்புகள், இளைஞர், மகளிர் மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட ஜொகூர் மாநில அரசால் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் உதவிகள் குறித்த விளக்கங்களுக்கும் இந்த அமர்வு முக்கியத்துவம் அளிக்கிறது.

அரசு கொள்கைகள்,  திட்டங்களை திறம்படவும் விரிவாகவும் செயல்படுத்துவதில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும் மேம்பாடுகளைப் பரிந்துரைக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த அமர்வு ஒரு நெருக்கமான ஒத்துழைப்பு வலையமைப்பை உருவாக்கி, ஜொகூர் மக்களுக்கு இஸ்கண்டார் புத்ரி பகுதியில் உள்ளவர்களுக்கு, அரசாங்கத் தகவல்களும் உதவிகளும் மிகவும் திறம்படச் சென்றடைவதை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset