நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகப் பணியாளர்களுக்கு 300 லிட்டர் ரோன் 95 பெட்ரோல் ஒதுக்கீடு: மலேசிய ஊடக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

கோலாலம்பூர்:
பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் முன்பு போலவே 300 லிட்டர் ரோன் 95 பெட்ரோல் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

இதற்கு அவர்களுக்கு ஒரு சிறப்பு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மலேசிய ஊடக சங்கங்களின் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டை 200 லிட்டராகக் குறைக்கும் முடிவு, குறிப்பாக மாநிலங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு நாளும் செய்தி சேகரிப்பு இடங்களுக்குத் தீவிரமாகப் பயணிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீட்டுக் காலம் முடிவடைவதற்கு முன்பே, தாங்கள் பெறும் 200 லிட்டர் பெட்ரோல் தீர்ந்து விடுகிறது.

இதனால் ஒவ்வொரு மாதமும் செய்தி சேகரிப்பு இடங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், குறிப்பாக மாநிலங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றுள்ளது.

ஆக அரசாங்கம் இவ்விவகாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அக்கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset