செய்திகள் மலேசியா
தனியார் துறையிலும் வீட்டிலிருந்தே பணி முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
மலேசியாவின் பொதுத்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள வீட்டிலிருந்தே பணி புரியும் திட்டத்தைப் பின்பற்றி, தனியார் துறையினரும் இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிச்சூழலை உருவாக்க முன்வர வேண்டும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயல்பாட்டுச் செலவு, மானியச் சேமிப்பு, நிறுவனங்கள், ஊழியர்களின் போக்குவரத்து மற்றும் தினசரி செயல்பாட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கு இம்முறை பெரும் துணையாக இருக்கும்.
இதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் அரசாங்க எரிபொருள் மானியங்களை, நாட்டின் மிக அத்தியாவசியமான பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
திங்கள், வெள்ளி ஆகிய முக்கிய நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் எஞ்சியுள்ள மூன்று நாட்களை வீட்டிலிருந்தே பணியாற்றும் நாட்களாகத் தனியார் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என அவர் ஆலோசனையை முன்வைத்தார்.
பல வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதையும் அவர் உதாரணமாகக் காட்டினார்.
வீட்டிலிருந்தே பணிபுரிவதால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தைப் போக்கிய அமைச்சர், ஊழியர்களைக் கண்காணிக்க 'Spot Me' எனும் நவீன செயலி பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:46 pm
அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
April 17, 2026, 12:19 pm
தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு
April 17, 2026, 12:15 pm
அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார்
April 17, 2026, 12:12 pm
கைரியை கெடாவில் களமிறக்குவதா?; 15ஆவது பொதுத் தேர்தலின் தவறை மீண்டும் செய்ய வேண்டாம்: ஆய்வாளர்
April 17, 2026, 11:58 am
