நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் கலாச்சாரக் கொண்டாட்டம்; மலேசியா-இந்தியா உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் 15ஆவது ஆண்டு விழா, இந்தியக் கலாச்சாரத்தின் அழகை வெற்றிகரமாக எடுத்துக்காட்டியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நேற்று இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன்,

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடு, நாட்டில் உள்ள பல்வேறு இன சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு முக்கியச் சின்னம்.

கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அழகையும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் மதிப்பையும் கொண்டாடும் மிகவும் அர்த்தமுள்ள ஓர் இரவைத் தொடங்கி வைக்கிறோம்.

மரியாதை, புரிதல்,  நீண்டகால நட்பின் அடிப்படையில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது என்பதை இன்றிரவு நிரூபிக்கிறது.

இந்த விழாவில் மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டியும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையை சித்தரிக்கும் தாள யோகா செயல்விளக்கங்கள் பாரம்பரிய பரதநாட்டிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெற்றிகரமாக கவர்ந்ததாக யுனேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset