செய்திகள் மலேசியா
அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
ஜாசின்:
சாலையில் அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் அவரின் காதலிக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்ப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஜொகூர் செல்லும் வழியில் பேருந்து ஓட்டிக் கொண்டே பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை ஆடவர் வீடியோ எடுத்திருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களை வைரலானது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் விரைவுப் பேருந்து ஓட்டுநரும் அவரது காதலிக்கும் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று சிறைத் தண்டனை விதித்தது.
தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 36 வயதான ஆரிப் பஹ்மிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 21 வயதான நூர் அடிலா நஜ்வாக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை வாசித்த உடனேயே இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், தம்பதியினருக்குக் கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது வைத்திருக்கவோ தகுதியிழப்பும் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 12:19 pm
தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு
April 17, 2026, 12:16 pm
தனியார் துறையிலும் வீட்டிலிருந்தே பணி முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்
April 17, 2026, 12:15 pm
அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார்
April 17, 2026, 12:12 pm
கைரியை கெடாவில் களமிறக்குவதா?; 15ஆவது பொதுத் தேர்தலின் தவறை மீண்டும் செய்ய வேண்டாம்: ஆய்வாளர்
April 17, 2026, 11:58 am
