நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நில விவகாரத்தில் சமரசம் கிடையாது: அமைச்சுகளுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவு

கோலாலம்பூர்: 

கூட்டரசு நில ஆணையருக்குச் சொந்தமான, நீண்ட காலமாக மேம்படுத்தப்படாத நிலங்களின் நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய அனைத்து அமைச்சுகளும் உத்தரவிடப்பட்டுள்ளன.

தேசிய தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இதனை வலியுறுத்தியுள்ளார்.

கைவிடப்பட்ட நிலங்கள் இருப்பது, சட்டத்தை மீறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கிறது என்றார் அவர்.

"இம்மாதிரியான நிலங்கள் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள், விதிமுறைகளை மீறும் வணிக நடவடிக்கைகள் போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும்" என்று அவர் இன்று பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கூட்டரசு நில மேம்பாடு, பயன்பாட்டுச் சிறப்புக் குழுக் கூட்டங்கள், அனைத்து அமைச்சுகளுடனும் கலந்துரையாடுவதற்கும், நியாயமான, நடைமுறைக்கு இணக்கமான, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று ஷம்சுல் அஸ்ரி கூறினார்.

 முன்னதாக, கெடா சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பாட்லிஷா, அரசு நிலத்திலோ அல்லது தனியார் நிலத்திலோ, முறையான அனுமதியின்றி நிலங்களில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டும் பிரச்சினையைத் தீவிரமாகக் கருதினார்.

அமலில் உள்ள சட்டங்கள், விதிமுறைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சரியான அதிகார வழிகளையும் அனுமதிகளையும் புறக்கணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் சமரசம் செய்ய முடியாத ஒன்று என்று கெடா சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset