நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மசாஜ் நிலையங்களில் மறைமுக விபச்சாரமா?; ஷா ஆலமில் 11 வெளிநாட்டுப் பெண்கள் அதிரடியாக கைது

ஷா ஆலம்:

ஷா ஆலம், புக்கிட் ரிமாவ் பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதிகளைச் சிலாங்கூர் மாநிலக் குடிவரவுத் துறையினர் அதிரடியாகச் சோதனையிட்டனர். 

கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்த 'ஓப் கெகார்' (Op Gegar) நடவடிக்கையில், சமூக ஊடகங்கள் வழியாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வந்த இரண்டு சட்டவிரோத மையங்கள் முறியடிக்கப்பட்டன.

இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) வழியாகப் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு, அதன் பின்பே தேர்வுகள் நடைபெறுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இங்கு மசாஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் 40 ரிங்கிட் வசூலிக்கப்படும் அதேவேளையில், விபச்சார தொழிலுக்காக 200 ரிங்கிட் வரை கட்டணம் பெறப்பட்டுள்ளது. கைதானவர்களில் வியட்நாமைச் சேர்ந்த பெண் ஒருவர், தாம் ஓராண்டுக்கு முன்பே இங்கு வந்ததாகவும் இத்தகைய விபச்சார ரீதியான மசாஜ் சட்டவிரோதமானது என்று தமக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சோதனையில் மியான்மர், தாய்லாந்தைச் சேர்ந்த தலா நான்கு பெண்கள், சீனாவைச் சேர்ந்த இருவர், வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெண் என மொத்தம் 11 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாதது, தங்கும் காலக்கெடு முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் அனைவரும் பிடிபட்டதாகச் சிலாங்கூர் குடிவரவுத் துறை இயக்குநர் கைரூல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காகச் குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய விபச்சார நடவடிக்கைகளைத் தடுக்கத் தொடர்ந்து கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset