செய்திகள் கலைகள்
திரையில் மீண்டும் தர்மா ஹாரூன்
அம்பாங்:
'ஃபெலாய் எஃப்எக்ஸ்: அப்பா மாவ் தாக்குட்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரிச்சர்ட் உங், அதன் இயக்குநர் ஜாம்ரி ஜாகரியாவுடன், 1980களின் பிரபல நடிகரும், மறைந்தவருமான தர்மா ஹருன் அல்-ரஷித்தின் அந்தத் திரைப்படத்தில் ஈடுபாடு, திட்டமிடப்படாமல், தற்செயலாக நிகழ்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த அந்த புகழ்பெற்ற மலேசிய நடிகர் தனது 35 வயதுடைய மகன் முஹம்மத் அல் சியாஃபிக் முஹம்மத் அஸ்மான் பங்கேற்கும் அந்தத் திரைப்படத்தின் தேர்வுச் செயல்பாட்டில் கலந்து கொள்ள வந்ததாக ரிச்சர்ட் கூறினார்.
இருப்பினும், அந்த மறைந்த நடிகரின் வருகை, அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருப்பதையும், ஒரு முக்கிய பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதையும் அவர்கள் கண்டதால், எதிர்பாராத விதமாக மற்றொரு வாய்ப்பைத் திறந்தது என்று தெரிவித்தார்.
தர்மாவின் அனுபவத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரத்தை வழங்குமாறு ஜாம்ரிக்கு தான் பரிந்துரைத்ததாக ரிச்சர்ட் கூறினார்.
"அப்போது, மறைந்தவருக்கு இன்னும் உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. சியாஃபிக்கின் தேர்வுச் செயல்பாட்டிற்காக அவர் வந்தார். இருப்பினும், அவர் இன்னும் 'உறுதியாக' இருந் தால் ஒரு கும்பல் தலைவர் அல்லது 'ரேடர்' கிளப்பின் தலைவர் பாத்திரத்தை ஏற்குமாறு நான் அவரை இயக்குநரிடம் பரிந்துரைத்தேன். மறைந்தவர் ருடி என்ற பாத்திரத்தை நன்றாக ஏற்று நடித்தார்" என்று சமீபத்தில் இங்குள்ள மசூதி அல் முஸ்தகிமில் நடைபெற்ற 'ஃபெலாய் எஃப்எக்ஸ்' திரைப்படத் திரையிடலைக் கொண்டாடும் நல்வாழ்த்து வழிபாட்டு நிகழ்ச்சியிலும், மறைந்த தர்மாவிற்கான தஹ்லில் நிகழ்ச்சியிலும் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.
மறைந்த தர்மா, கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி, கோலாலம்பூரின் வங்சா மாஜுவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். கடுமையான கெஸ்ட்ரிக், ஆஸ்துமா, இதயம், நுரையீரல், தைராய்டு ஆகியவற்றில் வீக்கம் போன்ற பிரச்சினைகளால் மறைந்தவர் பாதிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், தனது தந்தை படப்பிடிப்புத் தளத்தில் நடிப்பதைப் பார்க்கும்போது தனக்கு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, தனது தந்தை ஏற்று நடித்த பாத்திரத்தில் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டதாக சியாஃபிக் ஒப்புக்கொண்டார். அந்தப் பாத்திரம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்றார் அவர்.
வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு வரவிருக்கும் 'ஃபெலாய் எஃப்எக்ஸ்: அப்பா மாவ் தாக்குட்' திரைப்படம், 1980களில் 'அடிக் மஞ்சா' திரைப்படத்தின் மூலம் பிரபலமான மறைந்த தர்மாவின் கடைசித் திரைப்படமாகும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
