செய்திகள் மலேசியா
மோசடி கும்பலின் வலையில் சிக்கிய விரிவுரையாளர்: நொடிப்பொழுதில் பறிபோன RM97,000 சேமிப்பு பணம்
குவாந்தான்:
பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகக் கூறி மிரட்டிய மோசடி கும்பலிடம் தனது வங்கித் தகவல்களை வழங்கிய விரிவுரையாளர் ஒருவர், சுமார் RM97,400 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
குவாந்தான் மாவட்டப் போலிஸ் துணை ஆணையர் அஷாரி அபு சாமா இது குறித்துத் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் வங்கி கணக்கிலிருந்து கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மர்ம நபர்களின் கணக்கிற்குப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி, காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதி, போலிஸ் அதிகாரி எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட இருவர், அந்த விரிவுரையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர் பணமோசடி வழக்கில் தேடப்படும் நபர் எனக் கூறி அச்சமூட்டிய அந்த கும்பல், விசாரணைக்காக அவரது வங்கித் தகவல்களைக் கேட்டுள்ளது. சட்ட நடவடிக்கைக்குப் பயந்த அந்த விரிவுரையாளர், தனது ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த சில நாட்களிலேயே, அவரது சேமிப்புப் பணம் அனைத்தும் திருடப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத் தொகுப்பின் 420-வது பிரிவின் கீழ் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மர்மமான தொலைபேசி அழைப்புகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வங்கித் தகவல்களை எக்காரணம் கொண்டும் அந்நியர்களிடம் பகிர வேண்டாம் என்றும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்குமாறும் அல்லது 997 என்ற தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:46 pm
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
