நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்களை சிரித்து மகிழ வைத்த தொக்கோ சத்தியாவுக்கு உதவும் நோக்கில் மாபெரும் விழா; மே 8ஆம் தேதி நடைபெறும்: ஜெகன்

கோலாலம்பூர்:

மலேசிய மக்களை சிரித்து மகிழ வைத்த தொக்கோ சத்தியாவுக்கு உதவும் நோக்கில் மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி சொல்ல உனக்கு என்ற பெயருடன் இவ்விழா வரும் மே 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தனின் நடைபெறும் டிபிஎம் ஸ்டுடியோவின் இயக்குநர் ஜெகன் கூறினார்.

தமிழ், மலாய் என இரு மொழிகளிலும் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர் சத்தியா.

குறிப்பாக நகைச்சுவையில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இன்று வரை இல்லை.

இந்நிலையில் சத்தியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு அவரின் ஒரு காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் வாயிலாக நீக்கப்பட்டது. 

தற்போது அதே காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அக்காலின் தொடைப் பகுதி வரை  தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருக்கும் நோக்கில் தான் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு மலேசியா ஊடகத்தின் எஸ்பி பிரபா ஏற்பாட்டில், சிஆர் கார்த்திக் ஒத்துழைப்புடன் இவ்விழா நடைபெறுகிறது.

ஆர்டிஎம் புகழ் கலைப்படம் பாணியில் பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டு இவ்விழா நடைபெறவுள்ளது.

டிஎச்ஆர் புகழ் கவிமாறன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

குறிப்பாக நாட்டின் பல கலைஞர்கள் இவ்விழா கலந்து கொள்ளவுள்ளனர்.

சத்யாவுக்கு உதவும் நோக்கில் இந்த விழா நடைபெறுவதால் நிதியுதவி வழங்கலாம் என்றால் அது முடியாது.

காரணம் டிக்கெட் வாங்குவதன் வாயிலாகவே அவருக்கு மக்கள் உதவ முடியும்.

இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மாறாக நிதி உதவி வழங்க நினைத்தால் நேரடியாக அவரை சந்தித்து அந்த உதவியை வழங்கலாம்.

ஆக பொதுமக்கள் திரளாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சத்யாவுக்கு உதவ வேண்டுமென ஜெகன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு ஜெகன் 0182685774, எஸ்பி பிரபா 0126261489 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset