நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர் -
டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான நகை வழக்குத் தீர்ப்புக்காக ஜூன் 10ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

40க்கும் மேற்பட்ட நகைகள் தொலைந்து போனது தொடர்பாக, டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக லெபனான் நகை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் தாக்கல் செய்திருந்த 14.57 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான வழக்கின் மீதான தீர்ப்புக்கான தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

போலிஸ் தலைமை ஆய்வாளர், வழக்கில் மூன்றாம் தரப்பாக உள்ள மலேசிய அரசாங்கத்தின் சார்பில் ஆறாவது சாட்சியான சோங் டோங் லியோங் தனது சாட்சியத்தை நிறைவுசெய்தது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், நீதிபதி டத்தோ குவே சூன் தீர்ப்புக்கான தேதியை நிர்ணயித்தார்.

வழக்கின் தரப்பினர் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய மே 13 ஆம் தேதியையும், எதிர் வாதங்கள் மே 28 ஆம் தேதியையும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

தீர்ப்பு ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜூம் வழியாக வழங்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset