நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் ஆசிரியை விபத்தில் உயிரிழந்தார்

பொந்தியான்: 

நேற்று மாலை இங்குள்ள ஜாலான் ஸ்ரீ மெனாந்தி பரிட் சிகோமின் 2.2 கிலோமீட்டரில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு பெண் ஆசிரியை உயிரிழந்தார்.

37 வயதுடைய பாதிக்கப்பட்ட ஜமாலியா அரிஸ், பெக்கான் நானாஸில் உள்ள டத்தோ முஹம்மத் யூனுஸ் சுலைமான் தேசிய இடைநிலைப் பள்ளியின் ஆசிரியையும் ஆவார். பொந்தியான் மருத்துவமனையில் அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.

பொந்தியான் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் ஹாட்ஸ்ராட் ஹுசைன் மியோன் ஹுசைன், மாலை 4.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், ஒரு தொயோட்டா வியோஸ் கார், ஒரு இசுஸு லாரியை உள்ளடக்கியதாகும் என்று தெரிவித்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்தப் பெண் ஆசிரியை ஓட்டிய தொயோட்டா வியோஸ் கார், பரிட் பாசிலாம் சந்திப்பில் இருந்து வெளியேறி, சம்பந்தப்பட்ட லாரியுடன் மோதியதாகக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

"விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் கடுமையாகக் காயமடைந்து, பொந்தியான் மருத்துவமனையில் இறந்தார். அதே சமயம், லாரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

"மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுநர் மீது நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவு எதிர்மறையானதாகக் கண்டறியப்பட்டது" என்றார் அவர்.

1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) பிரிவு 41(1) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

"சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சிகள் இருந்தால், பொந்தியான் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் கொடுக்கவும், அல்லது விசாரணைக்கு உதவ, இன்ஸ்பெக்டர் டோங் சியூ ஃபெனை 010-2090396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset