நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி

புத்ராஜெயா:

பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இவ்வாறு கூறினார்.

பூடி95 திட்டத்திற்காகச் செயல்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி, டீசல் மானியங்களை இலக்கு வைக்கும் செயல்முறையை உடனடியாக ஆய்வு செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியமைச்சை கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொருளாதார நடவடிக்கைக் குழு  கூட்டத்திலோ அல்லது புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலோ இந்த செயல்முறை குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது பணப் பரிமாற்ற வடிவில் வழங்கப்படும் பூடி டீசல் தனிநபர் மானியத்தை, பூடி 95 திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.

அதே வழிமுறைக்கு மாற்றுவதற்கான சிறந்த வழிமுறையையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset