செய்திகள் மலேசியா
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
புத்ராஜெயா:
நாட்டில் நாளை முதல் டீசல் விலை 75 சென் குறையும் என்று நிதியமைச்சு கூறியது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களில் ஏற்படும் முதல் விலை வீழ்ச்சியாக, தீபகற்ப மலேசியாவில் நாளை முதல் டீசல் விலை 75 சென் குறையும்.
இதற்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் விலை 6.72 ரிங்கிட்டாக ஆக இருந்த நிலையில், தற்போது 5.97 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 ஆகியவற்றின் விலைகளும் தலா 25 சென் குறைந்துள்ளன.
இந்த விலை மாற்றத்தின்படி, நாளை முதல் ரோன் 97 விலை 5.10 ரிங்கிட்டாகவும், மானியமில்லாத ரோம் 95 விலை 4.02 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
இந்த விலைகள் ஏப்ரல் 22 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:46 pm
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
