நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்

கோலாலம்பூர்:

வரும் ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த  விரும்புவதாக ரபிசி ரம்லி கூறினார்.

கோழைத்தனமாக ஆர்ப்பாட்டம் செய்யும் குழுக்களைக் கடுமையாகச் சாடிய அவர்,

ஏப்ரல் 25, சனிக்கிழமை அன்று நடைபெறும் "அஸாம் பாக்கியைப் பிடி" போராட்டத்தில் மக்கள் தங்கள் உண்மையான தைரியத்தைக் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அரசு ஊழியர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதாகக் கூறப்படும் பங்குடைமை ஊழல், பெருநிறுவன மாபியாவுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாகியின் ராஜினாமாவைக் கோரியே இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

மலேசியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும்.

விரும்பும் இளைஞர்கள், மலேசியர்களுடன் நானும் களமிறங்குவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset