நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது

கோலாலம்பூர்:

டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்துள்ளது.

பொதுச் சேவைத் துறையில் ருஸ்லியின் 32 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவமும், ஆளுமைமிக்க தலைமைத்துவமும் எச்ஆர்டி கோர்ப்பின் மாற்றத்தை முன்னெடுக்கும்.

மேலும் சமூக, பொருளாதார மேம்பாட்டின் தாக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்துள்ளன.

ருஸ்லி மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் (சிறப்பு) பட்டம் பெற்றவர்.

முன்னர் மலேசிய கூட்டுறவு மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்பட்ட மலேசிய கூட்டுறவு ஆணையத்தில் 1993-ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடங்கினார்.

தனது தொழில் வாழ்க்கை முழுவதும், கொள்கை, செயல்பாடுகள், ஆளுகை மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைமைப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அத்துடன், மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டம், தேசிய கூட்டுறவுக் கொள்கைகளின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார்.

2022ஆம் ஆண்டில், அவர் 2025ஆம் ஆண்டு வரை எஸ்கேஎம்மின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset