செய்திகள் மலேசியா
பினாங்கு வழக்கறிஞர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கன் உட்பட இருவர் மரணம்
கோலாலம்பூர்:
வழக்கறிஞர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கன் உட்பட இருவர் மரணமடைந்தனர்.
இங்குள்ள கிங் தெருவில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்த இருவரில், புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கனும் ஒருவர்.
சமீபத்தில் தனது 88ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சான் மார்க்கன், சில சட்டரீதியான பணிகளை முடிப்பதற்காக அந்த அலுவலகத்தில் இருந்தார்.
உயிரிழந்த மற்றொருவரான 60 வயதான சந்திரா பின்வானி ஜிவத்ராம் அந்த அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.
பிற்பகல் 1.05 மணிக்கு சான் மார்க்கன் ஒரு ஜன்னலுக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சந்திரா பின்னர் பிற்பகல் 3.26 மணிக்கு, சுவரருகே கோப்புகளின் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டார் என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் முகமது ஷோகி ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:46 pm
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
